சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

10 லட்சம் மக்கள் தொகைக்கு கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கும் விகிதம்

Posted On: 09 MAR 2021 1:19PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதில் அளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சவுபே கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

2021 மார்ச் 3 வரை, இந்தியா முழுவதும் 1,58,43,204 தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதாவது 10 லட்சம் பேரில் 11,675 பேருக்கு கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

2021 மார்ச் 3 வரை, தமிழ்நாடு முழுவதும் 5,34,658 தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதாவது 10 லட்சம் பேரில் 7,011 பேருக்கு கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

2021 மார்ச் 3 வரை, புதுச்சேரியில் 13,971 தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதாவது 10 லட்சம் பேரில் 8,973 நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

உலகத்திலேயே மக்கள் தொகை அதிகமாக கொண்ட இரண்டாவது பெரிய நாடு இந்தியாவாகும். இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது 10 லட்சம் மக்கள் தொகையில் கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கப்படும் விகிதம் பாராட்டுக்குரியது.

தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையை தொடர்ந்து சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பு மருந்து வழங்கும் பணியை இந்தியா தொடங்கியது.

தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் தன்மை உடையவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1703443

*****************


(Release ID: 1703566) Visitor Counter : 130