பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

நிதி நிறுவனங்களின் தற்போதைய நிலையை உறுதி செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் அறிவுரை

Posted On: 25 FEB 2021 11:40AM by PIB Chennai

திருத்தப்பட்ட நிறுவனங்கள் சட்டம் 2013, நிதி விதிகள் 2014-இன் கீழ் என்டிஹெச்-4 என்ற படிவத்தின் மூலம் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்திடம் விண்ணப்பித்து நிறுவனங்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவோ (நிறுவனங்கள் சட்டம் 1956-இன் கீழ் நிதி நிறுவனமாக அறிவிக்கப்பட்ட நிறுவனங்கள்), அல்லது நிதி நிறுவனமாகவோ (1.4.2014-க்குப் பிறகு நிதி நிறுவனமாக ஒன்றிணைக்கப்பட்ட நிறுவனங்கள்) அறிவிக்கப்பட வேண்டும். என்டிஹெச்-4 படிவத்தில் விண்ணப்பங்களை பரிசோதனை செய்தபோது இந்த நிறுவனங்கள் போதிய விதிகளை பின்பற்றாததை மத்திய அரசு கண்டறிந்தது. இதன் காரணமாக நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

நிதி நிறுவனங்களில் உறுப்பினராக சேர்ந்து தங்களது பணத்தை முதலீடு செய்யும் முன்னர் அந்த நிதி நிறுவனம் மத்திய அரசால் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து, உறுதி செய்து கொள்ளுமாறு முதலீட்டாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700679


(Release ID: 1700886) Visitor Counter : 229