பிரதமர் அலுவலகம்

பிரதமரின் கிசான் திட்டம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது

நமது விவசாயிகளின் உறுதித் தன்மையும், ஆர்வமும் எழுச்சியூட்டுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்
வரலாற்றிலேயே அதிகமான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு அறிமுகப்படுத்தியது: பிரதமர்

Posted On: 24 FEB 2021 10:54AM by PIB Chennai

விவசாயிகளின் கௌரவமான, வளமான வாழ்க்கையை உறுதி செய்யும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட பிரதமரின் கிசான் திட்டம் இன்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்திகளில், “நமது நாட்டு மக்களுக்கு உணவு அளிப்பதற்காக இரவும், பகலும் கடுமையாக உழைக்கும் விவசாயிகளுக்கு கௌரவமான, வளமான வாழ்க்கை வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் பிரதமரின் கிசான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நமது விவசாயிகளின் உறுதித் தன்மையும், ஆர்வமும் எழுச்சியூட்டுகிறது.

வேளாண் துறையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக கடந்த ஏழு ஆண்டுகளில் இந்திய அரசு ஏராளமான முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேம்பட்ட பாசனம் முதல் அதிக தொழில்நுட்பம், அதிக கடன், சந்தைகள் முதல் முறையான பயிர் காப்பீடு, மண் வளத்தில் கவனம் செலுத்துவது முதல் இடைத்தரகர்களின் நீக்கம்  வரை அனைத்து நடவடிக்கைகளும் உள்ளடங்கியுள்ளன.

குறைந்தபட்ச ஆதரவு விலையில் வரலாற்று உயர்வை ஏற்படுத்தும் வாய்ப்பை நமது அரசு பெற்றது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

விவசாயிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த ஓர் பார்வையை நமோ செயலியில் நீங்கள் காணலாம்” என்று தெரிவித்துள்ளார்.

*****



(Release ID: 1700409) Visitor Counter : 153