நிதி அமைச்சகம்
போபாலில் வருமான வரித்துறையினர் சோதனை
प्रविष्टि तिथि:
22 FEB 2021 1:34PM by PIB Chennai
கடந்த 18-ஆம் தேதி பேதுல்லை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சோயா பொருட்கள் தயாரிக்கும் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மத்தியப் பிரதேசத்தில் பேதுல், சத்னா, மகாராஷ்டிரா மற்றும் கொல்கத்தாவில், மும்பை சோலாப்பூர் ஆகிய இடங்கள் உட்பட மொத்தம் 22 வளாகங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூபாய் 8 கோடிக்கும் அதிகமான ரொக்கமும், கணக்கில் கொண்டு வரப்பட்ட ரூபாய் 44 லட்சத்திற்கும் அதிகமான பல்வேறு நாடுகளின் வெளிநாட்டு பணமும் கைப்பற்றப்பட்டது. இந்த சோதனையின்போது 9 வங்கி லாக்கர்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் போலி நிறுவனங்களிடமிருந்து ரூ. 259 கோடி அளவிலான பங்கு மூலதனம் என்ற வகையில் கணக்கில் காட்டப்படாத பணத்தை இந்தக் குழுமம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மடிக்கணினிகள், வன் தட்டுகள், பென் டிரைவ்கள் போன்ற டிஜிட்டல் ஊடகம் வாயிலாகவும் குற்றங்களுக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை நடைபெற்ற விசாரணையில் ரூ. 450 கோடிக்கும் அதிகமான வருமானத்தில் கொண்டுவரப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699886
(रिलीज़ आईडी: 1699974)
आगंतुक पटल : 182