உள்துறை அமைச்சகம்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த தினத்தை நினைவு கூறும்வகையில் நடத்தப்பட்ட ‘சௌரியாஞ்சலி’ நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு. அமித்ஷா பங்கேற்பு
Posted On:
19 FEB 2021 6:15PM by PIB Chennai
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகத்தில் நடத்தப்பட்ட ‘சௌரியாஞ்சலி’ நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு. அமித்ஷா கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வங்காளத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா மரியாதை செலுத்தினார். வங்காள புரட்சியாளர்களின் வெல்லமுடியாத தைரியத்தை வெளிப்படுத்தும் கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சுதந்திர போராட்டம் தொடர்பான கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் திரு. அமித்ஷா பேசியதாவது:
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மீது நாட்டு மக்கள் இன்னும் அதிக அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர். அவரின் ஆளுமை, தேசபக்தி, தியாகம் ஆகியவை பல தலைமுறைகளாக இந்தியர்களின் மனதில் இருக்கும். சுபாஷ் சந்திபோஸின் நினைவை அழிப்பதற்கு பல முயற்சிகள் நடந்தன. ஆனால் மோடி அரசின் முயற்சியால், வரும் தலைமுறையினரும் நேதாஜியின் தியாகத்தை நினைவில் கொள்வர்.
சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கை வரலாற்றை, இளம் தலைமுறையினர் ஒரு முறையாவது படிக்க வேண்டும். அதில் இருந்து கற்க பல விஷயங்கள் உள்ளன.
நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை இளைஞர்கள் நினைவில் கொள்ள வேண்டும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
இவ்வாறு திரு.அமித்ஷா பேசினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699446
----
(Release ID: 1699512)
Visitor Counter : 277