சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்கல்: தீவிரப்படுத்தப்பட்ட இந்திரதனுஷ் 3.0-ஐ டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்
Posted On:
19 FEB 2021 4:53PM by PIB Chennai
தீவிரப்படுத்தப்பட்ட இந்திரதனுஷ் 3.0-ஐ மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று தொடங்கி வைத்தார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் திரு. அஷ்வினி குமார் சௌபே மற்றும் பிகார் சுகாதார அமைச்சர் திரு. மங்கல் பாண்டே ஆகியோரும் காணொலி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்திரதனுஷ் 3.0 இணையதளத்தையும் துவக்கி வைத்த அமைச்சர், இந்திரதனுஷ் 3.0 செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு மற்றும் தகவல் தொகுப்பையும் வெளியிட்டார்.
ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தைக்கும் தடுப்பு மருந்து வழங்குவதற்காக செய்யப்பட்டுள்ள விரிவான ஏற்பாடுகள் குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்தன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
2021 பிப்ரவரி 22 மற்றும் மார்ச் 22-ல் தொடங்கப்பட இருக்கும் இரண்டு சுற்றுகளை கொண்ட தீவிரப்படுத்தப்பட்ட இந்திரதனுஷ் 3.0, நாடு முழுவதுமுள்ள 29 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்ட 250 மாவட்டங்கள்/நகர்ப்புற பகுதிகளில் செயல்படுத்தப்படும்.
கொவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தின் போது தடுப்பு மருந்துகளை தவறவிட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மீது கவனம் செலுத்தபப்டும். 15 நாட்கள் இடைவெளியில் இரு சுற்றுகளில் அவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும்.
புலம்பெயர்ந்த பகுதிகளை சேர்ந்தோர் மற்றும் தொலைதூர இடங்களை சேர்ந்தோர் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
நிகழ்ச்சியில் பேசிய திரு.சௌபே, நமது நாட்டுக்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்திரதனுஷ் பிரச்சாரங்கள் அனைத்து மக்களுக்கும் தடுப்புமருந்து கிடைப்பதை உறுதி செய்யும் என்று கூறினார்.
**
(Release ID: 1699486)