உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

விமான போக்குவரத்து அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது

Posted On: 19 FEB 2021 4:16PM by PIB Chennai

விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. விமான போக்குவரத்து இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு. ஹர்தீப் சிங் புரி இதற்கு தலைமை தாங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. நீரஜ் டாங்கி, திரு. பிரஃபுல் படேல், திரு. ராஜிவ் பிரதாப் ரூடி, திரு. ஷ்வைத் மாலிக், திரு. சுப்பிரமணியன் சுவாமி, திரு. விஷ்வாம்பர் பிரசாத் நிஷாத் மற்றும் திரு. விநாயக் பவ்ராவ் ரவுத் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திரு. ஹர்தீப் சிங் புரி, கொவிட்-19 பெருந்தொற்றின் போது பொதுமக்கள் மற்றும் விமான போக்குவரத்து துறையின் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், ஒரு நாளைக்கு மூன்று லட்சம் பயணிகள் என்னும் அளவை தற்போது எட்டியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கோடை காலத்தின் போது பயணிகளின் எண்ணிக்கை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பயணக் கட்டணம் மற்றும் இன்னும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று திரு.புரி கூறினார்.

உடான் திட்டத்தின் கீழ் 700 வழித்தடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகவும், 300 வழித்தடங்கள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699392

                                                                      -----



(Release ID: 1699483) Visitor Counter : 130