கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

100 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை தீன்தயாள் துறைமுகம் கையாண்டுள்ளது


கொவிட்டுக்கு முந்தைய காலத்தை நோக்கி பொருளாதாரம் முன்னேறி வருவதற்கான குறிப்பிடத்தக்க அடையாளம்: திரு மன்சுக் மாண்டவியா

Posted On: 19 FEB 2021 2:31PM by PIB Chennai

இந்தியாவின் 12 முக்கிய துறைமுகங்களில் ஒன்றான தீன்தயாள் துறைமுகம், 100 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை  கையாண்டுள்ளது.

கண்ட்லா துறைமுகம் என்று முன்பு அழைக்கப்பட்ட தீன்தயாள் துறைமுகம், குஜராத்தில் உள்ள கட்ச்சில் அமைந்துள்ளது.

13.25 மில்லியன் மெட்ரிக் டன் திரவ சரக்குகள் மற்றும் 43.76 மில்லியன் மெட்ரிக் டன் உலர்ந்த சரக்கு களன்களை கண்ட்லாவிலும், 43.30 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை வடினாரிலும் தீன்தயாள் துறைமுகம் கையாண்டுள்ளது.

கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள், நிலக்கரி, உப்பு, சமையல் எண்ணெய், உரம், சர்க்கரை, மரச் சாமான்கள், சோயா பீன், கோதுமை ஆகியவை தீன்தயாள் துறைமுகம் கையாண்ட முக்கிய சரக்குகள் ஆகும்.

தீன்தயாள் துறைமுகம் எடுத்த முயற்சிகளை பாராட்டிய மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா, சவாலான கொவிட் காலகட்டத்தில் இது முக்கிய சாதனை என்றும், கொவிட்டுக்கு முந்தைய காலத்தை நோக்கி பொருளாதாரம் முன்னேறி வருவதற்கான குறிப்பிடத்தக்க அடையாளம் இது என்றும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699364

 

------



(Release ID: 1699425) Visitor Counter : 145