ரெயில்வே அமைச்சகம்
மேற்கு வங்கத்தில் பல்வேறு ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை அமைச்சர் திரு. பியுஷ் கோயல் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Posted On:
17 FEB 2021 6:27PM by PIB Chennai
மேற்கு வங்கத்தில் பல்வேறு ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை மத்திய ரயில்வே, வர்த்தகம் & தொழில்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு & பொது விநியோகம் அமைச்சர் திரு. பியுஷ் கோயல் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
புதிதாக மின்மயமாக்கப்பட்ட மணிகிராம்-நிமிட்டா பிரிவு, மால்டா மற்றும் மணிகிராமில் சாலைக்கடியில் பாலம், காக்ரகட் சாலை, லால்பாக் நீதிமன்ற சாலை, தேன்யா, தாஹாபர்தாம் மற்றும் நியாலிஷ்பராவில் ஐந்து நடை மேம்பாலங்கள் என கிழக்கு ரயில்வேயின் மால்டா மண்டலத்தில் இந்தத் திட்டங்களை காணொலி மூலம் அவர் இன்று திறந்து வைத்தார்.
புதிதாக மின்மயமாக்கப்பட்ட மணிகிராம்-நிமிட்டா பிரிவில் சரக்கு ரயிலையும் திரு. கோயல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் இணை அமைச்சர் திரு. பாபுல் சுப்ரியோ மற்றும் இதர பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. பியுஷ் கோயல், பிரதமர் திரு. நரேந்திர மோடி சொன்னவாறு, வர்த்தகம் மற்றும் தொழில் நடவடிக்கைகளில் நாட்டின் முன்னணி மாநிலமாக மேற்கு வங்கத்தை மாற்றுவதை நோக்கி நமது முயற்சிகள் அமைந்துள்ளது என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698781
------
(Release ID: 1698874)
Visitor Counter : 208