ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

தேசிய ரசாயண மற்றும் உரங்கள் நிறுவனம் ரூ.167.16 கோடி ஈவுத் தொகை வழங்கியது

Posted On: 17 FEB 2021 4:11PM by PIB Chennai

தேசிய ரசாயண மற்றும் உரங்கள் நிறுவனம் (Rashtriya Chemicals & Fertilizers Limited (RCF)ரூ.167.16 கோடி ஈவுத் தொகையை மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு. சதானந்தா கவுடாவிடம்  இன்று வழங்கியது

தேசிய ரசாயண மற்றும் உரங்கள் நிறுவனம் 2019-20 ஆம் நிதியாண்டுக்கான 28.4 சதவீத ஈவுத் தொகை ரூ.117.51 கோடியும்,  2020-21ம் நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத் தொகையாக ரூ.49.65 கோடியையும் வழங்கியது.

இந்த காசோலையை ஆர்சிஎப் நிறுவன தலைவர்  திரு. சீனிவாஸ் சி.முத்கரேகர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு. சதானந்தா கவுடா, ‘‘ கொரோ தொற்று ஏற்படுத்திய தடைகளையும் தாண்டி, இந்த நிதியாண்டில் ஆர்சிஎப் நிறுவனத்தின் சிறந்த செயல்பாடு குறிப்பிடத்தக்கது.

அனைத்து இடையூறுகளுக்கும் இடையிலும், இந்த நிதியாண்டில் 2020 டிசம்பர் வரை, அதன் நிகர லாபம் 235.65 சதவீதம் அதிகரித்து ரூ.221.09 கோடியை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இதன் நிகர லாபம் ரூ.65.87 கோடியாக இருந்தது’’ என்றார்.

உரங்கள் மற்றும் ரசாயண உற்பத்தியில் ஆர்சிஎப் முன்னணி நிறுவனமாக உள்ளது. இதன் 75 சதவீத பங்குகளை மத்திய அரசு வைத்துள்ளதுஇதன் இரண்டு ஆலைகளில் ஒன்று மும்பை டிராம்பே பகுதியில் உள்ளது. மற்றொன்று மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டம்  தால் என்ற இடத்தில் உள்ளது.

யூரியா, கலப்பு உரம், உயிரி உரம், நுண்ணூட்ட சத்துக்கள், 100 சதவீதம் நீரில் கரையக் கூடிய உரங்கள் மற்றும் இதர தொழிற்சாலை ரசாயணங்களையும் ஆர்சிஎப் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698692

-----



(Release ID: 1698835) Visitor Counter : 124