பாதுகாப்பு அமைச்சகம்

எல்லையோர உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக எல்லையோர சாலைகள் நிறுவனத்திற்கு 2021-22 பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு

Posted On: 17 FEB 2021 3:03PM by PIB Chennai

முன்கள பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக எல்லையோர சாலைகள் நிறுவனத்திற்கு 2021-22- ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையோர பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கான ஒதுக்கீடு ரூ 5,586.23 கோடியில் இருந்து ரூ 6,004.08 கோடியாக இந்தாண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.

எல்லையோர சாலைகளின் பராமரிப்பு பணிகளுக்கான ஒதுக்கீடு ரூ. 750 கோடியில் இருந்து ரூ. 850 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முதலீட்டு பணிகளுக்கான ஒதுக்கீடு ரூ. 2,300 கோடியில் இருந்து ரூ. 2,500 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நவீன கட்டுமான ஆலைகள், உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்து, முக்கிய காரணங்களுக்காக தேவைப்படும் கட்டுமானத்தின் வேகத்தை அதிகரிக்க, இந்த உயர்த்தப்பட்ட நிதி ஒதுக்கீடு உதவும்.

எல்லையோரங்களில் உள்ள முக்கிய சாலைகளின் சிறப்பான பராமரிப்புக்கு அதிகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் பெரும்பாலான பகுதி பயன்படுத்தப்படும்.

வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் முக்கியத்துவம் வாய்ந்த சாலைகள், சுரங்கங்கள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றின் கட்டுமானத்திற்கான பெரிய உந்துதலையும் இது அளிக்கும்.

------



(Release ID: 1698784) Visitor Counter : 122