மத்திய அமைச்சரவை

சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) சட்டம், 2015-ல் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 17 FEB 2021 3:52PM by PIB Chennai

குழந்தைகள் நலனை உறுதி செய்ய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கு சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) சட்டம், 2015-ல் திருத்தங்கள் செய்வதற்கான, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின், திட்டத்துக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சிறார் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதை உறுதி செய்யவும், நம்பகத்தன்மையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவுகளை , சிறார் நீதிச் சட்டத்தின் 61வது பிரிவின் கீழ், மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை ஆட்சியர் ஆகியோர் பிறப்பிப்பதற்கான அதிகாரம் அளிக்கும் வகையிலும் இந்த திருத்தங்கள் கொண்டு வரப்படவுள்ளன

சிறார் நீதிச் சட்டங்களை சுமுகமாக அமல்படுத்தவும், துயரமான சூழ்நிலைகளில் .ள்ள குழந்தைகளுக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல அமைப்பு உறுப்பினர்கள் நியமனத் தகுதிகளை நிர்ணயிப்பது, முன்னர் வரையறுக்கப்படாத குற்றங்களை,  கடுமையான குற்றம், கடுமையில்லாத குற்றம் என வகைப்படுத்துவது போன்றவை இத்திட்டத்தின் இதர அம்சங்களாகும். இச்சட்டத்தின் பல பிரிவுகளை அமல்படுத்துவதில் உள்ள பல சிக்கல்களுக்கும் இந்தத் திருத்தத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது

**********

 


 



(Release ID: 1698719) Visitor Counter : 244