தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கொவிட் தடுப்பூசி, தற்சார்பு இந்தியா: விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி மும்பையில் தொடக்கம்
Posted On:
16 FEB 2021 2:08PM by PIB Chennai
கொவிட்-19 தடுப்பூசி, தற்சார்பு இந்தியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்லூடகக் கண்காட்சி ஊர்தியை மகாராஷ்டிராவின் முதன்மை சுகாதாரச் செயலாளர் டாக்டர் பிரதீப் குமார் வியாஸ் மும்பையில் உள்ள திரைப்படப் பிரிவு வளாகத்தில் இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார். திரைப்படப் பிரிவின் தலைமை இயக்குநர் திருமிகு ஸ்மிதா வத்ஸ் ஷர்மா, உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் விவேக் ஆர் பர்தேசி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மும்பையில் மூன்று வழித்தடங்களில் இந்த வாகனம் பயணம் செய்யும். இந்தப் பிரச்சாரத்தின் போது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 16 வாகனங்கள், மகாராஷ்டிராவின் 36 மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். எல்இடி திரைகளில் காட்சி தகவல்கள் ஒளிபரப்பப்படுவதுடன், கியூஆர் கோட் வாயிலாக இந்த வாகனங்கள் செல்லும் வழிகளையும் ஜிபிஎஸ் மூலம் நேரடியாகத் தெரிந்து கொள்ளலாம்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் புனே மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், உலக சுகாதார அமைப்பு, யூனிசெஃப், மகாராஷ்டிராவின் சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து இந்த பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698401
**************
(Release ID: 1698492)