குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் கால்பந்து, கூடைப்பந்து மைதானங்கள் : குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்

Posted On: 16 FEB 2021 3:38PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் எஸ்டேட்டில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கிரிடா ஸ்தல்லை (புதுப்பிக்கப்பட்ட கால்பந்து மற்றும் கூடைப்பந்து மைதானங்கள்) குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, சமுதாயத்தில் பின்தங்கிய குழந்தைகளின் நலனுக்காகப் பணிபுரியும் அறக்கட்டளையான புதுதில்லி, விகாஸ்புரியை சேர்ந்த மை ஏஞ்சல்ஸ் அகாடெமியின் குழந்தைகளுக்கிடையே நட்பு ரீதியான கால்பந்துப் போட்டி நடைபெற்றது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றுவோர் மற்றும் அவர்கள் குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த நவீன வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில், பிரசிடெண்ட் செக்ரெட்டேரியட் ஹீரோஸ், ஹவுஸ்ஹோல்ட் யங்க்ஸ், பிபிஜி வாரியர்ஸ், ஆர்மி கார்ட் டேர்டெவில்ஸ் மற்றும் தில்லி போலீஸ் ஸ்டால்வார்ட்ஸ் ஆகிய ஐந்து அணிகளுக்கிடையே துறைகளுக்கிடையேயான கால்பந்துப் போட்டி இன்றிலிருந்து தொடங்குகிறது.

***********


(Release ID: 1698488)