வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

காக்கிநாடா ஆழ்கடல் துறைமுகத்திலிருந்து அரிசி அனுப்பப்பட்டது

Posted On: 14 FEB 2021 10:43AM by PIB Chennai

இந்தியாவின் அரிசி ஏற்றுமதிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் காக்கிநாடாவின் ஆழ்கடல் துறைமுகத்திலிருந்து சரக்கு கப்பல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. நங்கூர அமைவு துறைமுகத்தில் நெருக்கடி காரணமாக காக்கிநாடா ஆழ்கடல் துறைமுகத்திலிருந்து அரிசியை அனுப்ப  ஆந்திரப்பிரதேச அரசு அனுமதி வழங்கியது.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடாவின் உறுப்பினரும் ஏற்றுமதியாளருமான சத்தியம் பாலாஜி அரிசி தொழில்துறை நிறுவனம், கடந்த 12-ஆம் தேதி காக்கிநாடா ஆழ்கடல்  துறைமுகத்திலிருந்து சரக்கை அனுப்பியது.

அரிசியின் ஏற்றுமதிகளை பதிவு செய்து, கண்காணிக்கும் அபெடா, காக்கிநாடா ஆழ்கடல் துறைமுகத்தை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்த அனுமதி வழங்குமாறு ஆந்திரப்பிரதேச அரசிடம் வலியுறுத்தி இருந்தது. ஆந்திரப்பிரதேச கடல்சார் வாரியத்தின் கண்காணிப்பில் இயங்கும் காக்கிநாடா ஆழ்கடல் துறைமுகத்தை ஏற்றுமதிக்காக பயன்படுத்துவது இந்திய அரிசி ஏற்றுமதியை பெரிதும் ஊக்குவிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697871

********


(Release ID: 1697921) Visitor Counter : 198