குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் மாளிகையின் வருடாந்திர ‘உத்யானோத்சவ்’ நிகழ்ச்சியை பிப்ரவரி 12 அன்று குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார், பிப்ரவரி 13 முதல் முகலாயர் தோட்டம் பொது மக்களுக்கு திறப்பு

Posted On: 11 FEB 2021 6:27PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையின் வருடாந்திரஉத்யானோத்சவ்நிகழ்ச்சியை 2021 பிப்ரவரி 12 அன்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்.

பிப்ரவரி 13 முதல் மார்ச் 21 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (பராமரிப்பு தினமான திங்கட்கிழமை தவிர) முகலாயர் தோட்டம் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும்.

கொவிட் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக https://rashtrapatisachivalaya.gov.in அல்லது  https://rb.nic.in/rbvisit/visit_plan.aspx என்னும் இணையதளங்களில் முன்கூட்டியே பதிவு செய்து கொள்வோர் மட்டுமே தோட்டத்தை பார்க்க அனுமதிக்கப்படுவர்.

தண்ணீர் குடுவைகள், பெட்டிகள், கைப்பைகள், புகைப்பட கருவிகள், வானொலி பெட்டிகள், குடைகள், திண்பண்டங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டாமென்று பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கிருமி நாசினி, குடிதண்ணீர், கழிவறைகள், முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.

முகலாயர் தோட்டத்தை தவிர, குடியரசுத் தலைவர் மாளிகை, குடியரசுத் தலைவர் மாளிகையின் அருங்காட்சியகம், படைவீரர்கள் பணிமாற்ற அணிவகுப்பு ஆகியவற்றையும் பொதுமக்கள் காணலாம். மேலும் விவரங்களுக்கு http://rashtrapatisachivalaya.gov.in/rbtour/ என்னும் தளத்தை பார்க்கவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697166

 

***



(Release ID: 1697241) Visitor Counter : 108