வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான தளவாடங்கள்: தரம் வாய்ந்த, நிலையான அனுப்பும் முறைகள் முக்கிய பங்கு
Posted On:
10 FEB 2021 1:57PM by PIB Chennai
பொருட்களை அனுப்பும் முறைகளின் ஒட்டுமொத்த வர்த்தக செயல்பாட்டை தரம் உயர்த்துதலுக்கான கண்ணோட்டத்திலும், மேம்பாடு அடைவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் தளவாடப் பிரிவு, பிப்ரவரி 9-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பு செயலாளர் (தளவாடங்கள்) திரு பவன் அகர்வால் இதனை தெரிவித்தார்.
தற்போது இறுதிகட்ட பணியில் உள்ள தேசிய தளவாடங்கள் கொள்கையின் ஒரு பகுதியான தேசிய அனுப்பும் முறையின் முன்முயற்சி பற்றி ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது. தளவாட கட்டணங்களைக் குறைத்து, பொருளின் பாதுகாப்பை உறுதிசெய்து, நிலையான தன்மையை ஊக்குவிப்பதே இந்தக் கொள்கையின் நோக்கம் ஆகும். இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, உணவு, பானங்கள், மின்னணு வர்த்தகம் போன்ற துறையினருடன் ஆலோசனை நடைபெற்றது. இந்தியாவில் பொருட்களை அனுப்பும் முறைகளின் தற்போதைய நிலை குறித்தும், அதனை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். கட்டுப்பாடுகள், தரம் உயர்த்துதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன், நீடித்த தன்மை ஆகியவை இதில் அடங்கும். பொருட்களை அனுப்பும் முறைகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வர்த்தக செயற்பாடுகளின் தரத்தை மேம்படுத்துவதில் தொழில் துறையும், அமைச்சகமும் மட்டுமே உந்துசக்தியாக செயல்படலாம் என்றும், தளவாட நிறுவனங்கள் அல்ல என்றும் திரு பவன் அகர்வால் சுட்டிக்காட்டினார். இதனை முன்னெடுத்துச் செல்வதற்காக அமைச்சகங்கள் இடையேயான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பொருட்களை அனுப்புவதில் மிகப்பெரிய அங்கம் வகிக்கும் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற மின்னணு வர்த்தக நிறுவனங்கள் நிலையான அனுப்பும் முறையில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696721
------
(Release ID: 1696842)
Visitor Counter : 173