சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

பாதுகாப்பான சாலைகள் குறித்த கருத்தரங்கம்

Posted On: 06 FEB 2021 8:12PM by PIB Chennai

பாதுகாப்பான சாலைகள்மற்றும் ஆபத்தான இடங்களை அடுத்த ஒரு வருடத்தில் நீக்குவது குறித்த கருத்தரங்கை புதுதில்லியில் உள்ள போக்குவரத்து பவனின் ஊடக மையத்தில் பிப்ரவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இரண்டு அமர்வுகளாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நடத்தியது

 கொவிட் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு நேரடி மற்றும் ஆன்லைன் ஆகிய இரண்டு நடைமுறைகளின்படி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 அரசுகல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் ஆலோசகர்கள் உள்ளிட்ட 20 பேர் நேரடியாக பங்கேற்ற நிலையில் சுமார் 850 பேர் இணையதளம் வழியாக பங்கேற்றனர்.

 2021 பிப்ரவரி 3 அன்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் செயலாளர் திரு. கிரிதர் அரமனே இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

 சாலையில் பொறியியல் அம்சங்கள் காரணமாக விபத்துக்கள் ஏற்படாத வகையில் சாலைகளை வடிவமைக்க வேண்டும் என்று தனது தொடக்க உரையில் அவர் வலியுறுத்தினார்.

 இதை வரவேற்ற சாலை மேம்பாட்டு தலைமை இயக்குநர் திரு. ஐ கே பாண்டேசாலைகளில் பயணிக்கும் போது மிகவும் எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும் என்று பொது மக்களை கேட்டுக் கொண்டார்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1695849

 

------



(Release ID: 1695875) Visitor Counter : 135