மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஆசியான் - இந்தியா ஹேக்கத்தான், ஆசியான் - அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு தொடர்பான செயல் திட்டத்துடன் (APASTI 2016-2025) நன்கு ஒத்துப்போகிறது : டாக்டர் ரமேஷ் பொக்கிரியால்

Posted On: 05 FEB 2021 11:32AM by PIB Chennai

ஆசியான் - இந்தியா அறிவியல் தொழில்நுட்ப போட்டி (ஹேக்கத்தான்) விருது நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்கிரியால், மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர்  ஆகியோர் இதர அமைச்சர்கள் மற்றும் ஆசியான் நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்து கொண்டனர். இந்தியா மற்றும் 10 ஆசிய நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், வழிகாட்டிகள், மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஹேக்கத்தான் நிகழ்ச்சி நிறைவடைந்தது.  

இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் பேசியதாவது:

முதல் ஆசியான்-இந்தியா ஹேக்கத்தானை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக அனைவருக்கும் வாழ்த்துக்கள். இதில் பங்கேற்ற அனைத்து ஆசியான் நாடுகளுக்கும் நன்றி.  கடந்த 3 நாட்களாக, 54 குழுவினர், 11 வகையான சிக்கலான விஷயங்களுக்கு தீர்வு காண்பதில் கடுமையாக பணியாற்றினர்.  இந்த ஹேக்கத்தானில் பங்கேற்றவர்களின் பணி தரமானதாக இருந்ததாக நடுவர்கள், வழிகாட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.  ஆசியான் - இந்தியா ஹேக்கத்தான்,  ஆசியான் - அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு தொடர்பான செயல் திட்டத்துடன் (APASTI 2016-2025) நன்கு ஒத்துப்போகிறது. 

இவ்வாறு திரு ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்தார். 

வெளியுறுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் பேசகையில், ‘‘ இளைஞர்கள் தங்களின் அறிவையும், ஆற்றலையும் ஒன்றாக பயன்படுத்துவதற்கு ஆசியான்-இந்தியான் ஹேக்கத்தான்  ஒரு தனிச்சிறப்பான தளம். பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கூட்டுணர்வை வளர்ப்பதற்கும், பல்வேறுபட்ட கருத்துக்கள், கலாச்சாரங்கள், பணிநெறிமுறைகளை அறிந்து கொள்வதற்கும், இது சிறப்பான வாய்ப்பு’’ என்றார். 

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கல்வியில் இந்தியா மற்றும் ஆசியான்  நாடுகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதுதான், இந்தியா ஆசியான்-இந்தியா ஹேக்கத்தான் 2021-நிகழ்ச்சியின் நோக்கம். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695404
                                                                                                 -------



(Release ID: 1695559) Visitor Counter : 192