பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

‘‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’’ என்ற பிரதமரின் தொலைநோக்கை மத்திய நிதிநிலை அறிக்கை பிரதிபலிக்கிறது: டாக்டர் ஜித்தேந்திர சிங்

Posted On: 05 FEB 2021 10:35AM by PIB Chennai

‘‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’’ என்ற பிரதமரின் தொலைநோக்கை மத்திய நிதிநிலை அறிக்கை பிரதிபலிக்கிறது என மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.

மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்த நிதிநிலையறிக்கை , பிரதமரின்  ‘‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’’ என்ற தொலைநோக்கை உண்மையாகவே பிரதிபலிக்கிறதுஇந்த தொலைநோக்கு நிதிநிலையறிக்கை,  6 தூண்களில் ஒன்றாக உள்ளது. சீர்திருத்தங்களுக்கான திட்டங்களை இது கூறுகிறது

கடந்த சில ஆண்டுகளில், தீர்ப்பாயங்களில் விரைவில் நீதி கிடைக்க, சீர்திருத்தங்கள் கொண்டு வர பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனதீர்ப்பாயங்களின் செயல்பாட்டை மேலும் விவேகமாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை  இந்த நிதிநிலை அறிக்கை கூறுகிறது. எளிதாக தொழில் செய்யவும், தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், சமாதான அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும்ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனைகளை விரைவில் தீர்க்க இந்த சமாதான அமைப்பை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த, கடந்த 6 முதல் 7 ஆண்டுகளில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை பல புரட்சிகரமான நடவடிக்கைகைகளை  மேற்கொண்டது.

இவ்வாறு டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695390

******

(Release ID: 1695390)



(Release ID: 1695471) Visitor Counter : 251