புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், இந்தியா-பஹ்ரைன் இடையே முதல் கூட்டு செயற்குழுக் கூட்டம்
Posted On:
05 FEB 2021 8:53AM by PIB Chennai
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், இந்தியா-பஹ்ரைன் இடையே முதல் கூட்டு செயற்குழுக் கூட்டம் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக நடந்தது.
பஹ்ரைன் குழுவுக்கு, நீடித்த எரிசக்தி ஆணையத்தின் தலைவர் மேதகு அப்துல் ஹூசைன் பின் அலி மிர்சா தலைமை தாங்கினார். இந்திய குழுவுக்கு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு திணேஷ் தயானந்த் ஜக்டேல் தலைமை தாங்கினார். பஹ்ரைன் நாட்டின் இந்திய தூதர் திரு பியூஷ் ஸ்ரீவஸ்தவாவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து இந்தியா -பஹ்ரைன் இடையே கடந்த 2018-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி இந்த கூட்டம் ஆக்கப்பூர்வமாக நடந்தது. பருவ நிலை மாற்ற இலக்குகளை எதிர்கொள்ள, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் வலியுறுத்தின. அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முன்னேற்றங்கள், எதிர்கால இலக்குகள், இத்துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து இரு நாடுகளும் தெரிவித்தன. இத்துறையில் உள்ள அனுபவம், நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ள இரு நாட்டு குழுவினரும் ஒப்புக் கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695346
******
(Release ID: 1695346)
(Release ID: 1695467)
Visitor Counter : 267