பாதுகாப்பு அமைச்சகம்

உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான பிரதமரின் கொள்கையை இந்திய பெருங்கடல் பகுதி ராணுவ அமைச்சர்கள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார்

Posted On: 04 FEB 2021 3:25PM by PIB Chennai

பெங்களூருவில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா 2021 கண்காட்சிக்கு இடையே, இந்திய பெருங்கடல் பகுதியின் ராணுவ அமைச்சர்கள் மாநாடு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கின் சிறப்புரையுடன் பிப்ரவரி 4 அன்று தொடங்கியது. பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், தூதர்கள் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதி நாடுகளின் மூத்த அதிகாரிகள் நேரடியாகவும், காணொலி மூலமும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

7500 கி.மீ. நீள கடல்பரப்பை கொண்ட இந்தியா, இந்திய பெருங்கடல் பகுதியின் மிகப்பெரிய நாடாக திகழ்வதாகவும், அனைத்து நாடுகளின் அமைதியான மற்றும் வளமிக்க கூட்டுணர்வுக்கு முக்கிய பங்காற்ற வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளதென்றும் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

இந்திய பெருங்கடல் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய வளம் என்று கூறிய திரு ராஜ்நாத் சிங், உலகின் சரக்கு கப்பல்களில் பாதியையும், உலகின் மொத்த சரக்கு போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கையும், உலகின் எண்ணெய் கப்பல் போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்கையும் இயக்குவதற்கு காரணமாக விளங்கும் இந்திய பெருங்கடல், சர்வதேச வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான உயிர்நாடியாக திகழ்வதாக கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2015-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சாகர் திட்டம் - பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி - என்பதேயே இந்திய பெருங்கடல் கொள்கையின் மையக்கருவாக உள்ளது என்றும் திரு சிங் கூறினார்.

இதை சார்ந்து, பாதுகாப்பு, வர்த்தகம், தொடர்புகள், தீவிரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் கலாச்சார பகிர்தல்கள் மீது இந்திய பெருங்கடல் பகுதியின் ராணுவ அமைச்சர்கள் மாநாடு கவனம் செலுத்த வேண்டுமென்று அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695120

***


(Release ID: 1695192) Visitor Counter : 281