பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் 2021-22 - ம் ஆண்டுக்கான திட்டப் பணிகள்
Posted On:
04 FEB 2021 12:09PM by PIB Chennai
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் திட்டப் பணிகளுக்கு ரூ.15 கோடியும், திட்டமிடாப் பணிகளுக்கு ரூ.30 கோடியும் உள்ளது.
2021-22-ம் ஆண்டில் கீழ்கண்ட பணிகளை நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை மேற்கொள்ளவுள்ளது.
1. குடிமைப் பணிகள் தினம் 2021, ஏப்ரல் 21-ம் தேதி கொண்டாப்படும்.
2. பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்கான பிரதமர் விருதுகள் அக்டோபர் 31-ம் தேதி வழங்கப்டும்.
3. தேசிய மின்-நிர்வாக விருதுகள் 2021, தேசிய மின்-நிர்வாக கருத்தரங்கையொட்டி பின்னர் அறிவிக்கப்படும் நாளில் வழங்கப்படும்.
4. அனுபவ அறிவுகளை பகிர்ந்துக் கொள்வதற்காகவும், சிறந்த நிர்வாக நடைமுறைகளை மீண்டும் செயல்படுத்துவதற்காகவும், 4 மண்டல மாநாடுகளை நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை நடத்தும்.
5. விருது வென்ற நடைமுறைகளை பின்பற்றுவதற்கு மாநிலங்களுக்கு உதவ, மாநிலக் கூட்டு முயற்சித் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும்.
6. மத்திய அமைச்சகங்கள் மற்றும் இணைப்பு/துணை/தன்னாட்சி அலுவலகங்களில் மின்-அலுவலக முறை ஊக்குவிக்கப்படும்.
7. அரசு அலுவலகங்கள் நவீனமயமாக்கப்படும்.
8. மக்கள் குறைகளை விரைந்துத் தீர்க்க, பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு முறை சீர்திருத்தங்கள், மத்திய அமைச்சகங்கள்/மாநில அரசுகளில் அமல்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695060
*******
(Release ID: 1695060)
(Release ID: 1695104)
Visitor Counter : 176