சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஸ்ரீராம் வர்த்தக கல்லூரியின் 94-வது ஆண்டு நிறுவன தின விழா: காணொலி வாயிலாக மாணவர்களிடையே உரையாற்றினார் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 03 FEB 2021 2:10PM by PIB Chennai

ஸ்ரீராம் வர்த்தக கல்லூரியின் 94-வது ஆண்டு நிறுவன தின விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாடினார்.

ஆசிய கண்டத்திலேயே மிகச் சிறந்த கல்லூரிகளுள் ஒன்றாக ஸ்ரீராம் வர்த்தக கல்லூரி விளங்குவதாகவும், பெரு நிறுவன விவகாரங்கள், சட்டம், அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்களை இந்தக் கல்லூரி தயார் செய்திருப்பதாகவும் கூறி அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

உலகிற்கே ஆசானாக உயரும் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையையும் அதை நிறைவேற்றும் வகையிலான செயல்திறனைப் பெற்றுள்ள நமது இளைஞர்கள் குறித்தும் வலியுறுத்திய டாக்டர் ஹர்ஷ் வர்தன், “நமது நாட்டின் இளைஞர்களுக்கு  அரசு பெரும் முக்கியத்துவத்தை வழங்குகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலின்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை, வருங்கால சந்ததியினரின் கல்வித்தரத்தில் பெரும் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும். சமூக கட்டமைப்பில் முதன்மையானதாக விளங்கும் கல்விக்கு முன்னுரிமை வழங்கி அதன் தரத்தை உயர்த்துவதில் நமது அரசு உறுதி பூண்டுள்ளது”, என்று கூறினார். “நமது இளைஞர்களை புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், காப்புரிமைகளை பெறவும், புதிய தயாரிப்புகளை உருவாக்கி, வளமடைய அவர்களை நாம் ஊக்குவித்து விரைவான வளர்ச்சியை நோக்கி நாட்டை செலுத்தினால் மட்டுமே தற்சார்பு இந்தியா என்ற கனவை  நிறைவேற்ற முடியும்”, என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

விஞ்ஞானிகள், மருத்துவ பணியாளர்களின் பணிகளைப் பாராட்டிய அவர், “சவாலான தருணங்களிலும் இந்திய விஞ்ஞானிகளும் மருத்துவப் பணியாளர்களும் துணையாக செயல்படுகிறார்கள். 1.35 பில்லியன் மக்களுக்கும் தடுப்பூசி வழங்குவது தொடர்பாக அரசு காலநேரம் பாராமல் பாடுபடுகிறது என்ற உறுதியை நான் வழங்குகிறேன்என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694714

••••••


(Release ID: 1694768) Visitor Counter : 188