அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தொழில்நுட்பத்தை உள்நாட்டு மயமாக்குதல் குறித்து, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு கொள்கை ஆலோசனை கூட்டத்தில் மத்திய இந்திய பகுதியைச் சேர்ந்த நிபுணர்கள் ஆலோசனை

Posted On: 01 FEB 2021 9:39AM by PIB Chennai

தொழில்நுட்பத்தை உள்நாட்டு மயமாக்குதல் குறித்து, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு கொள்கை (science, technology, and innovation policy (STIP)  எஸ்டிஐபிஆலோசனை கூட்டத்தில் மத்திய இந்திய பகுதியைச் சேர்ந்த நிபுணர்கள் ஆலோசித்தனர்.

 

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு வரைவுக் கொள்கை  கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது முதல் இது குறித்த ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பெறப்பட்டு வருகின்றன.  

இதன் 4-வது ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. உத்தரப் பிரதேசத்தின் அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில், அம்பேத்கர் பல்கலைக்கழகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து, மத்திய இந்திய பகுதியில் காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.

இதில் தொழில்நுட்பத்தை உள்நாட்டுமயமாக்க வேண்டும், ஆயுஷ் போன்ற பாரம்பரிய மருத்துவத்தில் கவனம் செலுத்த வேண்டும், ஊரக பகுதி விஷயங்களில், மாநிலங்களின் பங்கு ஆகியவற்றை மத்திய இந்தியா பகுதியைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் வலியுறுத்தினர்.

இதில் பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் எஸ்டிஐபி செயலாளர், டாக்டர் அகிலேஷ் குப்தா, ‘‘ இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பில் கொவிட்-19 புதிய கோணத்தை கொண்டு வந்துள்ளது. இதில் சமூக பிரச்னைகளுக்கு குறிப்பாக சுகாதார பிரச்னைகளுக்கு அறிவியல்தான் தீர்வாக உள்ளது. இந்த சூழலில், அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு கொள்கை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. இதில் இந்திய அரசின் 82 துறைகள் பங்கேற்றுள்ளன’’ என்றார்.

 

எஸ்டிஐபி தலைமை செயலகம், இதுவரை 300 ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 43,000 பேர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். வரும் வாரங்களிலும் இந்த ஆலோசனை கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693803


(Release ID: 1693943) Visitor Counter : 305