சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது

Posted On: 27 JAN 2021 7:45PM by PIB Chennai

நாடு தழுவிய மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் 12-ஆம் நாள் 28 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. கொரோனா தடுப்பு மருந்தை இது வரை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியுள்ளது.

41,599 முகாம்களில் 23,28,779 சுகாதார பணியாளர்களுக்கு இன்று மாலை 6 மணி வரை வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை 6 மணி வரை 5,308 முகாம்கள் நடைபெற்றன.

12-ஆம் நாளான இன்று நாடு முழுவதும் 2,99,299 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தமிழ்நாட்டில் 4,316 பேருக்கு இன்று தடுப்பூசி போடப்பட்டது. இறுதி தகவல்கள் இன்று பின்னிரவு கிடைக்கும்.

 

கடந்த 24 மணி நேர்த்தில் ஒடிசாவை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடற்கூறு ஆய்வறிக்கை இன்னும் வரவில்லை.

தடுப்பு மருந்தின் காரணமாக இது வரை எந்தவிதமான தீவிர பாதிப்பு/உபாதைகள்/இறப்பு ஏற்படவில்லை.

 

****


(Release ID: 1692791) Visitor Counter : 220