வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப் பந்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Posted On:
27 JAN 2021 5:34PM by PIB Chennai
உத்தரப் பிரதேசத்தின் முதல் முதல்வர் பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப் பந்தின் சிலைக்கு மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இவரது சிலை தில்லி பண்டிட் பந்த் மார்க் பகுதியில் புதிய இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இச்சிலைக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்திய சுதந்திர போராட்டத்தில் பண்டிட் கோவிந்த் வல்லப் பந்தின் பங்கு போற்றத்தக்கது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், புதிய இடத்தில் சரியான விதத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை பயணம் மற்றும் தத்துவம் ஆகியவை, நமது சமூகம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற இந்தியர்களை ஊக்குவிக்கிறது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் புதிய இந்தியா நமது வளமான பாரம்பரியத்தை பாதுகாக்கிறது. அதே நேரத்தில் வளர்ச்சி மற்றும் முற்போக்கான மாற்றத்துக்கு உத்வேகம் அளிக்கிறது. மத்திய விஸ்தா திட்டம், இது போன்ற ஒரு முயற்சியாகும். இதில் உள் கட்டமைப்பு தேவைகள் நிவர்த்தி செய்வதோடு, சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடங்களையும் பாதுகாக்கிறது.
இவ்வாறு திரு ஹர்தீப் சிங் பூரி பேசினார்.
பாரத ரத்னா பண்டிட் கோவிந் வல்லப் பந்த் உத்தரப் பிரதேசத்தின் முதல் முதல்வராக கடந்த 1946ம் ஆண்டு முதல் 1954ம் ஆண்டு வரை இருந்தார். மத்திய உள்துறை அமைச்சராக கடந்த 1955ம் ஆண்டு முதல் 1961ம் ஆண்டு வரை இருந்தார். கடந்த 1957ம் ஆண்டு இவர் பாரத ரத்னா விருதை பெற்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692684
***
(Release ID: 1692735)
Visitor Counter : 173