பாதுகாப்பு அமைச்சகம்
வீரதீர விருது வென்றவர்களுக்கு கௌரவம்: புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை அறிமுகப்படுத்தினார் அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
प्रविष्टि तिथि:
25 JAN 2021 3:56PM by PIB Chennai
வீரதீர விருதுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை (www.gallantryawards.gov.in) மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார். வீரதீர விருதுகளை வென்றவர்களை கௌரவிக்கும் காணொலி தளமாக இது விளங்கும். தேசிய அளவிலான வினாடி வினா, வீரத்திருமகன்களுக்கான செல்ஃபி ஆகிய முயற்சிகளும் இந்த தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், நாட்டை பாதுகாப்பதில் மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கும் நாட்டை பாதுகாக்கும் ஊக்க சக்தியை அளிக்கும் வகையில் வீரதீர விருது பெற்றவர்களின் பங்களிப்பு விளங்குவதாக வெகுவாகப் பாராட்டினார். வரும் ஆண்டுகளில் பொதுமக்களிடையே குறிப்பாக நாட்டின் இளைஞர்களிடையே நாட்டுப்பற்றை ஏற்படுத்தும் நோக்கத்தோடு அவர்களும் பங்கேற்பதற்கு ஏதுவாக இந்தத் தளத்தில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தின் அறிமுக விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான வீரதீர விருதுகள் பற்றிய வினாடி வினாவும் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளது. வீரதீர விருதுகள் குறித்த அறிவை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதே இந்த வினாடி வினாவின் நோக்கமாகும். இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 26 முதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692171
**********************
(रिलीज़ आईडी: 1692249)
आगंतुक पटल : 260