ஆயுஷ்

ஆயு சம்வாத் பிரச்சாரம் (எனது உடல் நலன், எனது பொறுப்புடைமை)

Posted On: 25 JAN 2021 3:31PM by PIB Chennai

ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவுடன், புதுதில்லியின் அகில இந்திய ஆயுர்வேதக் கழகம், ஆயுர்வேதம், கொவிட்-19 பெருந்தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தும் மிகப்பெரும் பிரச்சாரம், ஆயு சம்வாத் (எனது உடல் நலன், எனது பொறுப்புடைமை) ஆகும். இதனை முன்னிட்டு நாடு முழுவதும் 5 இலட்சத்திற்கும் அதிகமான கருத்தரங்கங்கள் நடைபெறும்.

அகில இந்திய ஆயுர்வேதக் கழகம், கடந்த 18 முதல் 21-ஆம் தேதி வரை ஆயுர்வேதக் கல்லூரிகளின் இயக்குநர்கள், முதல்வர்கள், மருத்துவ அதிகாரிகள், வல்லுநர்கள், மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் ஆயுர்வேதத்துடன் சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள பயிற்சியாளர்கள், திட்டத்துக்கான பயிற்சியை இணையதளம் வாயிலாக வழங்கியது.

இது குறித்த கையேட்டினையும், பவர் பாய்ண்ட் பிரசன்டேஷனையும் அகில இந்திய ஆயுர்வேதக் கழகம் வடிவமைத்துள்ளது. இதையடுத்து, அரசு அலுவலகங்கள், அரசுத்துறை சாரா ஊழியர்கள், பள்ளிகள், கல்லூரிகள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், கிராம சபைகள், தொழில் நிறுவனங்கள், பல்வேறு குடியிருப்பு சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், ஆஷா பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி பெற்றவர்கள் நாடு முழுவதும் கருத்தரங்கங்களை நடத்துவார்கள்.

பவர்பாயின்ட் பிரசென்டேஷனும் பயிற்சி குறித்த விவரங்களும் ஆயுஷ் அமைச்சகம், அகில இந்திய ஆயுர்வேதக் கழகம் போன்ற பல்வேறு அமைப்புகளின் இணையதளங்களில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692160

**********************

 



(Release ID: 1692241) Visitor Counter : 173