பிரதமர் அலுவலகம்

இன்றைய இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்கபூர்வமான மாற்றங்கள் நேதாஜி சுபாஷ் போசை அதிகம் பெருமை கொள்ள வைத்திருக்கும்; பிரதமர்


தற்சார்பு இந்தியா இயக்கத்தில் தற்சார்பு வங்கம் பெரும் பங்காற்றும் ; பிரதமர்

Posted On: 23 JAN 2021 8:02PM by PIB Chennai

நம்மை தைரியமாகவும், துணிச்சலுடனும் நிர்வகிக்கக்கூடிய  ஊக்கத்தைப் பெற நமக்கு ஒரு இலக்கும் வலிமையும் இருக்க வேண்டும் என்ற நேதாஜி சுபாஷ் போசின் பொன்மொழியை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். இன்று, தற்சார்பு இந்தியா இயக்கத்தில் நமக்கு ஒரு இலக்கும் வலிமையும் உள்ளது. தற்சார்பு இந்தியாவின் இலக்கை நமது உள் வலிமை மற்றும் உறுதிப்பாட்டின் மூலமாக அடைய முடியும் என்று திரு மோடி கூறினார். நேதாஜி சுபாஷ் சந்திர போசை மேற்கோள் காட்டிய பிரதமர், நமது ரத்தம் மற்றும் வியர்வையுடன் நமது நாட்டுக்கு பங்களிப்பது என்ற ஒற்றைக் குறிக்கோளுடன்  நாம் செயல்பட்டு, நமது கடின உழைப்பு மற்றும் புத்தாக்கம் மூலமாக தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றார். கொல்கத்தா விக்டோரியா நினைவு மண்டபத்தில் நடைபெற்ற பராக்கிரம தின விழாவில் அவர் உரையாற்றினார்.

துணிச்சல் மிக்க தப்பித்தலுக்கு முன்பாக, தமது உறவினர் சிசிர் போசிடம் நேதாஜி கேட்ட கேள்வி பற்றி குறிப்பிட்ட பிரதமர், ‘’ இன்று, ஒவ்வொரு இந்தியரும் தங்கள் கைகளை இதயத்தின் மீது வைத்து, நேதாஜி இருப்பதாக உணர்ந்தால், எனக்காக ஏதாவது செய்வாயாஎன்ற அதே கேள்வியை அவர் கேட்டிருப்பார்; இந்தப்பணி, இந்த இலக்கு, இந்த லட்சியம், என்பது இன்று இந்தியாவைத் தன்னிறைவாக மாற்றுவதுதான். நாட்டு மக்கள், நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்தையும் சேர்ந்த மக்கள் அனைவரும் இதில் அங்கம்’’ எனக் கூறினார்.

உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கானகுறைபாடு இல்லாத, பாதிப்பு இல்லாதஉலகுக்கு சிறந்த பொருட்களை தயாரிக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். சுதந்திர இந்தியாவை உருவாக்கும் கனவில் நம்பிக்கை இழக்கக்கூடாது, உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை  அடிமைப்படுத்த முடியாது என்று நேதாஜி கூறினார். உண்மையில், 130 கோடி இந்தியர்கள் தன்னிறைவு பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வறுமை, படிப்பறிவின்மை, நோய் போன்ற நாட்டின் பெரும் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடி வந்தார் என்று கூறிய பிரதமர், அவர் எப்போதும் ஏழைகளைப் பற்றியே சிந்தித்து வந்ததாகவும்கல்வி பற்றி  வலியுறுத்தியதையும் குறிப்பிட்டார். வறுமை, படிப்பறிவின்மை, நோய், அறிவியல் உற்பத்தி குறைபாடு ஆகியவை நமது மிகப் பெரும் பிரச்சினைகளாக உள்ளன என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சமுதாயம் ஒன்றுபடுவதுடன், இதற்கான முயற்சிகளை அனைவரும் சேர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று அவர்  வலியுறுத்தினார்.

இன்று நமது நாடு, பாதிப்புக்குள்ளான, நலிவடைந்த பிரிவினர், நமது விவசாயிகள், பெண்களை அதிகாரமயப்படுத்த இடையறாது உழைத்து வருவது தமக்கு மனநிறைவை அளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இன்று, ஒவ்வொரு ஏழையும், இலவச மருத்துவ சிகிச்சையையும், சுகாதார வசதிகளையும்  பெற்று வருகிறார்கள். விவசாயிகள் விதையில் இருந்து சந்தை வரை நவீன வசதிகளைப் பெற்று வருகின்றனர், இதனால் வேளாண்மைக்கு ஆகும் செலவு குறைந்துள்ளது; இளைஞர்களுக்கு தரமானநவீன கல்விக்கான உள்கட்டமைப்பு நவீனமயமாக்கப்பட்டு வருகிறது; 21-ம் நூற்றாண்டுக்கு பொருந்தக்கூடிய தேசிய கல்வி கொள்கையுடன்புதிய ஐஐடிக்கள், ஐஐஎம்கள், எய்ம்ஸ்கள்  உருவாக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்கபூர்வமான மாற்றங்கள் நேதாஜி சுபாஷ் போசை மிகவும் பெருமை கொள்ள வைத்திருக்கும் என்று பிரதமர் கூறினார். நவீன தொழில்நுட்பங்களில் நாடு தன்னிறைவு பெற்று வருவது, பெரும் உலக நிறுவனங்கள், கல்வி, மருத்துவத்துறை ஆகியவற்றில் இந்தியர்களின் ஆதிக்கம் ஆகியவற்றைப் பார்த்தால், நேதாஜி பெருமையாக உணருவார் என திரு மோடி தெரிவித்தார். ரபேல் போன்ற நவீன விமானங்களை இந்தியாவின் பாதுகாப்பு படையினர் வைத்திருப்பது, தேஜஸ் போன்ற நவீன போர் விமானங்களை இந்தியா தயாரிப்பது ஆகியவற்றின் மூலம், நமது படைகள் வலுப் பெற்றிருப்பதையும், பெருந்தொற்றை நாடு எதிர்கொண்ட விதத்தையும், உள்நாட்டில் தடுப்பூசிகளை உருவாக்கும் நவீன அறிவியல் தீர்வுகளை எட்டியிருப்பதுடன், மற்ற நாடுகளுக்கும் ஆதரவு அளிப்பதையும் பார்த்து  நேதாஜி தமது ஆசிகளை வழங்கியிருப்பார். எல்ஏசி முதல் எல்ஓசி வரை அவரது கனவுகளைக் கொண்ட வலிமையான இந்தியாவை உலகம் கண்டு வருகிறது. தனது இறையாண்மைக்கு எதிரான எந்த சவாலுக்கும்  இந்தியா உரிய பதிலடி கொடுத்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.

தற்சார்பு இந்தியா கனவுடன், நேதாஜி, சோனார் பாங்களாவின் ( பொன்னான வங்கம்) மிகப் பெரிய தூண்டுகோலாகவும் உள்ளார் என திரு மோடி தெரிவித்தார். நாட்டின் விடுதலையில் நேதாஜி ஆற்றிய பங்கைப் போலவே, தற்சார்பு இந்தியா வேட்கையில் மேற்கு வங்கம் ஆற்ற வேண்டியுள்ளது என பிரதமர் வலியுறுத்தினார். தற்சார்பு இந்தியாவுக்கு, தற்சார்பு வங்கமும், சோனார் பாங்களாவும் முன்னிலை வகிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

 

**********************


(Release ID: 1691718) Visitor Counter : 232