உள்துறை அமைச்சகம்
சுபாஷ் சந்திர போஸ் நினைவாக தன்னலமற்ற தொண்டாற்றும் தனிநபர்கள், அமைப்புகளுக்கு விருதுகள்
प्रविष्टि तिथि:
23 JAN 2021 5:38PM by PIB Chennai
பேரிடர் மேலாண்மையில் சிறப்பான பங்களிப்பையும், தன்னலமற்ற சேவையையும் ஆற்றி வரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் என்னும் வருடாந்திர விருதை இந்திய அரசு அறிவித்துள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினமான ஜனவரி 23 அன்று ஒவ்வொரு வருடமும் இந்த விருது அறிவிக்கப்படும். அமைப்பாக இருப்பின் ரூ 51 லட்சம் ரொக்கப் பரிசும் சான்றிதழும், தனிநபராக இருக்கும் பட்சத்தில் ரூ 5 லட்சம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.
இந்த வருடத்திற்கான விருதுக்கு, 2020 ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இது குறித்து அச்சு, காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் விரிவாக விளம்பரப்படுத்தப்பட்டு, 371 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
இந்த வருட விருதிற்கு அமைப்பு பிரிவில் நீடித்த சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தனிநபர் பிரிவில் டாக்டர் ராஜேந்திர குமார் பண்டாரியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பேரிடர் மேலாண்மை குறித்த, குறிப்பாக நிலச்சரிவுகள் குறித்த, அறிவியல் ஆய்வுகளுக்கு இந்தியாவில் அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவர் டாக்டர் ராஜேந்திர குமார் பண்டாரி ஆவார். சிஎஸ்ஐஆர்-சிபிஆர்ஐ மற்றும் மூன்று இதர இடங்களில் நிலச்சரிவு குறித்த இந்தியாவின் முதல் ஆய்வகத்தை அவர் உருவாக்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே
காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691607
**********************
(रिलीज़ आईडी: 1691648)
आगंतुक पटल : 419