சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ரூர்கி ஐஐடியில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ஆய்வு பிரிவை தொடர ஒப்பந்தம்
प्रविष्टि तिथि:
22 JAN 2021 11:56AM by PIB Chennai
நெடுஞ்சாலைத் துறை கட்டமைப்பு மேம்பாடு குறித்த ஆராய்ச்சி, கல்வி மற்றும் பயிற்சியில் கவனம் செலுத்துவதற்காக ரூர்கி ஐஐடியில் தொடங்கப்பட்ட பிரிவை தொடர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மற்றும் ரூர்கி ஐஐடி ஆகியவை கையெழுத்திட்டன. சாலை மேம்பாட்டுப் பிரிவு தலைமை இயக்குனர் திரு இந்திரேஷ் குமார் பாண்டே, ரூர்கி ஐஐடி துணை இயக்குனர் பேராசிரியர் மனோரஞ்சன் பரிதா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
சாலை போக்குவரத்து மற்றும் ரூர்கி ஐஐடியுடன், நெடுஞ்சாலை அமைச்சகம் வைத்துள்ள இந்த கூட்டு சாலை துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கைகளை வலுப்படுத்தும். நெடுஞ்சாலை கட்டமைப்பு மேம்பாட்டில் ஆய்வு பணிகளை ஒருங்கிணைந்து நடத்துவது மற்றும் கல்வி கற்பிப்பது போன்றவற்றில், பேராசிரியர் பதவியுடன் கூடிய இந்த பிரிவு சிறந்த தலைமையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691146
------
(रिलीज़ आईडी: 1691257)
आगंतुक पटल : 187