சுரங்கங்கள் அமைச்சகம்
ராஜஸ்தானில் பொட்டாஷ் உற்பத்திக்கு, 3 நிறுவனங்கள் இடையே முத்தரப்பு ஒப்பந்தம்
Posted On:
22 JAN 2021 11:24AM by PIB Chennai
ராஜஸ்தானில் பொட்டாஷ் உற்பத்திக்கான சாத்தியங்களை ஆய்வு செய்ய கனிமவள ஆய்வு நிறுவனம்(எம்இசிஎல்), ராஜஸ்தான் மாநில சுரங்க மற்றும் கனிமங்கள் நிறுவனம் (ஆர்எஸ்எம்எம்எல்), சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு பிரகலத் ஜோஷி, மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெஹ்வல் ராஜஸ்தான் முதல்வர் திரு அசோக் கெலாட் ஆகியோர் முன்னிலையில் காணொலிக் காட்சி மூலம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது குறித்து அமைச்சர் திரு பிரகலத் ஜோஷி கூறுகையில், ‘‘ராஜஸ்தானில் அதிகம் உள்ள கனிம வளத்தை பயன்படுத்தவும், சுரங்கம் தோண்டி, மேற்பரப்பில் உள்ள உப்பு படிமங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளவும், நாட்டின் முதல் பொட்டாஷ் சுரங்கம் அமைக்கவும், ராஜஸ்தானின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691136
----
(Release ID: 1691229)
Visitor Counter : 197