சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

7-வது ‌மாஸ்கிரேட் 2021: அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்

Posted On: 21 JAN 2021 4:38PM by PIB Chennai

ஃபிக்கி எனப்படும் இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும்  கடத்தல், போலியான நடவடிக்கைகளுக்கு எதிரான குழு  ஏற்பாடு செய்திருந்த 7-வது ‌மாஸ்கிரேட் 2021- கடத்தல், போலியான வர்த்தகங்களுக்கு எதிரான இயக்கத்தை மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், அதிகரித்துவரும் கடத்தல், போலியான பொருட்களுக்கு எதிராக புதுமையான கொள்கை மற்றும்  தீர்வுகள் தொடர்பாக விவாதிக்க இந்த நிகழ்ச்சி ஏதுவாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

கொவிட்-19 பெருந்தொற்று, சட்டத்திற்கு புறம்பான மருந்துகளின் புழக்கம் ஆகிய சவால்கள் குறித்து பேசிய அவர், “நாம் அனைவரும் அறிந்தவாறு கொவிட்-19 பெருந்தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடியிலும், நோய் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஏராளமான நடவடிக்கைகளுக்கு இடையிலும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பெருந்தொற்றை வாய்ப்பாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், உலக  மக்களின் பாதுகாப்பு பாதிப்படையும் வகையில் தீங்கு விளைவித்தனர்என்று தெரிவித்தார்.

கொவிட் தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் கடத்தல், போலி நடவடிக்கைகளுக்கு எதிராக புதிய, நடைமுறைக்கு உகந்த யுகங்கள் தொடர்பாக ஆக்கபூர்வமாக விவாதிப்பதே இந்த ‌மாஸ்கிரேட் 2021-இன் முக்கிய நோக்கமாகும். போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். கொவிட்- 19 பெருந்தொற்று, முன்னெப்போதும் இல்லாத தேவைகளை நமது சுகாதாரமுறையில் ஏற்படுத்தியுள்ளது. சுகாதார முறையை நோயாளிகளுக்கருகில் எடுத்துச் செல்வதற்காக தற்போது நிலுவையிலுள்ள விநியோக மாதிரிகளை சுகாதார பணியாளர்கள் மீண்டும் கண்டறிகிறார்கள்”, என்று அமைச்சர் கூறினார்.

மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கான திருத்தியமைக்கப்பட்டச் சட்டம் 2008-இன் கீழ் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் 1940  கொண்டுவரப்பட்டது என்று கூறிய அவர், போலி மருந்துகளைத் தடுப்பதற்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.  கடத்தல் மற்றும் போலியான பொருட்களால் அதிகரித்துவரும் இடர்பாடுகளைக் களைவதற்காக வர்த்தகங்களும், தொழில்துறையும் அரசுடன் இணைந்து பணியாற்றி நுகர்வோரை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்திய தற்சார்பு இந்தியா, உள்ளூர் பொருட்களை ஊக்குவித்தல் ஆகிய திட்டங்கள் பல்வேறு சவால்களுக்கு தீர்வுகளாக அமையும் என்று அவர் கூறினார். உள்ளூர் தயாரிப்புகளை இந்தியா அதிகரிப்பதன் வாயிலாக வெளிநாட்டு பொருட்களை சார்ந்திருக்கும் போக்கு குறைவதுடன் இதன்மூலம் போலியான பொருட்களும், கடத்தல்களும் முடிவுக்கு வரும் என்றார் அவர். எனவே சட்டவிரோத வர்த்தகத்திற்கு எதிரான போராட்டத்தில் உள்ளூர் பொருட்களை ஊக்குவிப்பது மிகச்சிறந்த சாதனமாக அமையும் என்றும் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை தெரிவித்தார்.

கடத்தல்கள், போலியான தயாரிப்புகள், திருட்டு போன்ற குற்றங்களுக்கு எதிராக தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை ஆராய்ந்து, நவீன தொழில்நுட்பங்களின் வாயிலாக பாதுகாப்பு அம்சங்களுக்கும் அமலாக்க முகமைகளுக்கும் உதவுவது, இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது விதிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்துவது, இந்த நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சிகளுக்குக் கூடுதலான நிதியையும் மனித ஆற்றலையும் வழங்குவது போன்ற துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690882

**********************


(Release ID: 1690975) Visitor Counter : 246