ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

நம்ரூப்பில் அமைக்கப்படவுள்ள உர தொழிற்சாலை குறித்த கூட்டத்திற்கு மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் தலைமை வகித்தார்

प्रविष्टि तिथि: 21 JAN 2021 3:38PM by PIB Chennai

ஒரு வருடத்திற்கு 12.7 லட்சம் மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி திறனோடு நம்ரூப்பில் அமைக்கப்படவுள்ள உர தொழிற்சாலை குறித்த கூட்டத்திற்கு மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு டி வி சதானந்த கௌடா தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பேசிய திரு கௌடா, வட கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சி பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முன்னுரிமையாக உள்ளதாக கூறினார்.

எனவே, பிரதமரின் லட்சியமான உர உற்பத்தியில் தன்னிறைவை அடையும் பொருட்டு, நவீன உர தொழிற்சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்துவது அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.

உள்நாட்டு விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, உபரி உரத்தை தெற்காசியாவில் உள்ள நமது அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த திட்டம் தொடர்பான தங்களது செயல்முறைகளை விரைந்து முடிக்குமாறு பங்குதார பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களை அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690851

 

***************


(रिलीज़ आईडी: 1690927) आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Manipuri , Punjabi , Telugu , Kannada