பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் எங் இங்க் ஹென் இடையே 5வது இந்திய-சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை
Posted On:
20 JAN 2021 3:38PM by PIB Chennai
இன்று நடைபெற்ற ஐந்தாவது இந்திய-சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கு சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் எங் இங்க் ஹென் உடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார்.
தங்களது காணொலி உரையாடலின் போது, கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய தடைகளுக்கிடையேயும் இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து இரு அமைச்சர்களும் திருப்தி தெரிவித்தனர்.
பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட சிறப்பான நடவடிக்கைகள் குறித்தும், அவற்றுக்கு சிங்கப்பூர் ராணுவத்தினர் அளித்த பங்களிப்பு குறித்தும் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
கொவிட்-19-ஐ கட்டுப்படுத்துவதில் நமது ராணுவத்தினர் ஆற்றிய பங்கு குறித்து எடுத்துரைத்த அவர், வெளிநாடுகளில் இருந்த இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.
பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்த சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர், பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் அரசின் ஒட்டுமொத்த அணுகலில் ராணுவத்தினரின் பங்கு குறித்து குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கிடையேயான வளர்ந்து வரும் ராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து இரு அமைச்சர்களும் திருப்தி தெரிவித்தனர். கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர்கள், ராணுவ அளவிலும், தொழில்நுட்ப மற்றும் வர்த்தக அளவிலும் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க உறுதி பூண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690378
*****
(Release ID: 1690495)
Visitor Counter : 227