சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

புவிசார்ந்த இடையூறுக்கான மேலாண்மை: மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகம்-டிஆர்டிஓ புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 20 JAN 2021 2:10PM by PIB Chennai

தொழில்நுட்பப் பரிமாற்றம்புவிசார்ந்த இடையூறுக்கான நிலையான மேலாண்மை ஒத்துழைப்பு ஆகியவற்றிற்காக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகமும், பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமும் (டிஆர்டிஓ), புதுதில்லியில் இன்று ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகத்தின் செயலாளர் திரு கிரிதர் அரமானே, டிஆர்டிஓவின் செயலாளர் டாக்டர் சதீஷ் ரெட்டி ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பனிச்சரிவுக்கான ஒருங்கிணைந்த திட்டம்/ நமது நாட்டின் பனிப் பிரதேசங்களில் ஏற்படும் நிலச்சரிவுகளிலிருந்து பாதுகாப்பதற்கு சுரங்கம் அமைப்பதற்கான ஆய்வுகள், உயர்கோபுரப் பாலங்கள், பல்வேறு பனிச்சரிவுகளுக்கான திட்டங்கள், வடிவமைப்புகள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது/ நிலச்சரிவுகளை கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பிற்குத் தேவையான திட்ட முன்மொழிவுகளை தயாரித்தல்/சுரங்கங்கள் பற்றிய புவியியல், புவிதொழில்நுட்பம், நிலப்பரப்பு படிமமாக்கம் போன்ற அம்சங்கள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்தல் போன்ற துறைகளில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகமும் டிஆர்டிஓவும் பரஸ்பர ஒத்துழைப்பு வழங்கும். நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் தேசிய நெடுஞ்சாலைகளில்  சாலைப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக  இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690335

*******

(Release ID: 1690335)



(Release ID: 1690435) Visitor Counter : 136