தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

கிராமப்புற அசாமில் வருடாந்திர வெள்ளம் ஏற்படுத்தக்கூடிய சிரமங்களுக்கிடையேயான வாழ்க்கையை எங்கள் திரைப்படம் ‘தி பிரிட்ஜ்’ பிரதிபலிக்கிறது: கிரிபால் கலிதா

இயக்குநர் திரு கிரிபால் கலிதாவின் அசாமிய மொழித் திரைப்படமான தி பிரிட்ஜ்’, அசாமில் உள்ள கிராமங்களில் ஒவ்வொரு வருடமும் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.

 

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை. கிராமப்புற அசாம் விவசாயி ஒருவரின் மகனான நான் இதை எதிர்கொண்டிருக்கிறேன்,” என்று கோவாவில் நடைபெறும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கலிதா கூறினார்.

 

அவரது திரைப்படம் 51-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்திய பனோரமா திரைப்படமல்லா பிரிவில் திரையிடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 2019-ஆம் ஆண்டு ஆவணப்படமான ‘100 இயர்ஸ் ஆஃப் கிரிஸோஸ்டோம் - எ பயோகிராஃபிக்கல் ஃபிலிம்’-இன் இயக்குநரும் தேசிய விருது பெற்ற இயக்குநர் மற்றும் திரை எழுத்தாளருமான திரு பிளெஸ்ஸி இபே தாமசும் பத்திரிகையார் சந்திப்பில் பங்கேற்றார்.

சுயாதீனப் பட இயக்குநரான திரு கலிதா நாடகப் பின்னணியில் இருந்து வந்தவர். பெரும்பாலும் புதுமுகங்களையே தனது திரைப்படத்தின் நடிகர்களாகவும், தொழில்நுட்ப கலைஞர்களாகவும் தேர்ந்தெடுத்திருந்தார்.

 

தனது மாநிலம் எதிர்கொள்ளும் சிக்கல்களை குறித்துப் பேசிய அவர், சிறப்பான வேலைவாய்ப்புகளுக்காக இதரப் பகுதிகளுக்கு இடம் பெயரும் உள்ளூர் மக்களால் அசாமின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதாகக் கூறினார்.

***********************

 


(Release ID: 1690144) Visitor Counter : 211