பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
ஷெல் இந்தியாவின் திரவ இயற்கை எரிவாயுவை சரக்குந்துகளில் ஏற்றும் பிரிவு: ஹசிராவில் திரு தர்மேந்திர பிரதான் துவக்கம்
Posted On:
19 JAN 2021 3:24PM by PIB Chennai
ஷெல் இந்தியாவின் திரவப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை சரக்குந்துகளில் ஏற்றும் பிரிவை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஹசிராவில் இன்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், எரிவாயு குழாய் வசதிகள் இல்லாத இடங்களுக்கு இயற்கை எரிவாயு சென்றடைவதற்கு இந்த மையம் உதவுவதோடு, நீண்ட தூர சரக்குப் போக்குவரத்திற்கு இயற்கை எரிவாயுவின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் என்றார்.
இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்கு ஷெல் இந்தியா குழுவைப் பாராட்டிய திரு பிரதான், திரவப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு துறையில் அதிகரித்து வரும் போட்டியின் மூலம் புதிய சந்தைகள் உருவாவதோடு, புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றும், தொழிற்சாலைகளில் தூய்மையான எரிபொருள்கள் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வழி வகுக்கும் என்றும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689994
-----
(Release ID: 1690032)
Visitor Counter : 183