சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

"பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் தந்தை"யான சுஷ்ருதாவுக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய வளாகத்தை டாக்டர் ஹர்ஷ் வர்தன் அர்ப்பணித்தார்

Posted On: 18 JAN 2021 3:53PM by PIB Chennai

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வளாகத்தை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், "பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் தந்தை"யான சுஷ்ருதாவுக்கு இன்று அர்ப்பணித்தார்.

தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வளாகத்தின் தேவை குறித்து பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், "பணியாளர்களின் இழப்புக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாக இருப்பது தீக்காயங்கள் ஆகும். இந்தியா போன்ற வளர்ந்துவரும் பொருளாதாரத்திற்கு இது கவலை அளிக்கக் கூடிய விஷயமாகும். இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 70 லட்சம் தீக்காயங்கள் ஏற்படும் நிலையில், 1.4 லட்சம் பேர் இறக்கின்றனர். 2.4 லட்சம் பேருக்கு தீவிர காயங்கள் ஏற்படுகின்றன. அதிகமான மக்கள் தொகையின் காரணமாக, பெரும்பாலான தீப்புண் சிகிச்சை மையங்கள் இடமின்மையால் தவிக்கின்றன. எனவே ஒரு அதிநவீன தீப்புண் சிகிச்சை மையம் அவசியமாகிறது. அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கக்கூடிய சுகாதார வசதிக்கான தேவை அதிகமாகவே உள்ளது. தீப்புண் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சியில் நவீன சிகிச்சை வழங்கும் நோக்கத்தோடு இந்தப் புதிய தீப்புண் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது," என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689680

***

 (Release ID: 1689705) Visitor Counter : 233