பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மின்னணு வழியாக ஓய்வூதியம் வழங்கு ஆணை, மூத்த குடிமக்களின் வாழ்க்கையை எளிமையாக்குகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
17 JAN 2021 5:16PM by PIB Chennai
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு வழியாக “ஓய்வூதியம் வழங்கு ஆணை” (பிபிஓ), மூத்த குடிமக்களின் எளிமையான வாழ்க்கையை உறுதி செய்வதாக மத்திய வடகிழக்கு மாகாணங்கள் வளர்ச்சிக்கான இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்துள்ளார்.
பணியாளர் அமைச்சகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஓய்வூதியங்கள் துறைக்கு பெரும்பாலும் மூத்த குடிமக்களிடமிருந்து அவர்கள் தங்கள் ஓய்வூதிய வழங்கு ஆணையின் அசலை தொலைத்துவிட்டதாக புகார்கள் எழுந்ததாகக் குறிப்பிட்டார். அதுபோன்ற தருணங்களில் ஓய்வூதியதாரர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரியதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தைப் பாராட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், இதன் வாயிலாக கடந்த ஆறு வருடங்களில் விரைவான வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும், பல்வேறு அமைச்சகங்களும், துறைகளும் பெருந்தொற்று காலத்திற்கு முன்பாகவே 80 சதவீத பணிகளை மின் அலுவலகம் வாயிலாக மேற்கொண்டதாகவும் கூறினார்.
மின்னணு வழியாக “ஓய்வூதியம் வழங்கு ஆணை”, பெருந்தொற்று காலத்தில் ஏராளமான ஓய்வூதிய அதிகாரிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிமையானதாகவும், சுமூகமானதாகவும் மாற்றும் முயற்சியில் ஏராளமான சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689390
-----
(Release ID: 1689440)
Visitor Counter : 194