நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
விவசாயிகளுக்கு சேவை செய்ய, தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் இந்திய உணவு கழகம் தயார் நிலையில் இருக்க வேண்டும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் வலியுறுத்தல்
प्रविष्टि तिथि:
15 JAN 2021 1:57PM by PIB Chennai
எதிர்காலத்தில், விவசாயிகளுக்கு சேவை செய்ய தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் இந்திய உணவு கழகம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய உணவு கழகத்தின் 57வது நிறுவன தினம் ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, மைசூரில் புதிதாக கட்டப்பட்ட மண்டல அலுவலகத்தை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கொவிட் தொற்று சமயத்தில், மக்களின் கஷ்டங்களை குறைக்க நாட்டில் சுமார் 80 கோடி மக்களுக்கு, இந்திய உணவு கழகம் உணவு தானியங்களை வழங்கியது பாராட்டத்தக்கது. மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு கோதுமை மற்றும் நெல்லை கொள்முதல் செய்துள்ளது. இந்திய உணவு கழகம் அரசு நிறுவனம் மட்டும் அல்ல, நாட்டுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு சேவை செய்யும் அமைப்பு.
இந்திய உணவுக் கழகம் 140 லட்சம் மெட்ரிக் டன் நெல், 390 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்தது. கொரோனா தொற்று சமயத்தில், பிரதமரின் ஏழைகளின் நலன் உணவு திட்டத்தின் கீழ் 305 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
முடக்க காலத்தில், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மக்களுக்கு உணவு மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன. இது குறிப்பிடத்தக்க சாதனை.
அரசு கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டது, விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பதற்கு வசதியாக இருந்தது. முன்பு மண்டிகளுக்கு செல்ல, விவசாயிகள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், இந்த முறை அந்த தூரம் வெகுவாக குறைக்கப்பட்டது. இது விவசாயிகளின் உற்பத்தி அதிகரிக்க உதவியது.
குறைந்தபட்ச ஆதரவு விலையில், உற்பத்தி பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் என்ற நம்பிக்கையையும் விவசாயிகளுக்கு இந்திய உணவு கழகம் அளிக்கிறது. எதிர்காலத்திலும், விவசாயிகளுக்கு இந்திய உணவு கழகம் தொடர்ந்து சேவை செய்யும். ராபி சந்தை பருவத்தில், கோதுமை கொள்முதல் மூலம் 40 முதல் 45 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர்.
எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு சேவை செய்ய, சர்வதேச தரத்தில் தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் இந்திய உணவு கழகம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688757
*****
(Release ID: 1688757)
(रिलीज़ आईडी: 1688785)
आगंतुक पटल : 204