நிதி அமைச்சகம்

ரூ 215.48 ஈவுத்தொகையை எஸ் பி எம் சி ஐ எல் செலுத்தியது

Posted On: 14 JAN 2021 5:08PM by PIB Chennai

இந்திய அரசுக்கு முழுவதும் சொந்தமான, நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் இயங்கும் பட்டியல்-'அ' மினி ரத்னா பிரிவு-1 மத்திய பொதுத்துறை நிறுவனமான செக்யூரிட்டி பிரின்டிங் அண்டு மின்ட்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், ரூ 215.48 ஈவுத்தொகையை மத்திய அரசுக்கு செலுத்தியது.

2019-20 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத் தொகையான இது, 2020 மார்ச் 31-இன் படி நிறுவனத்தின் நிகர மதிப்பில் 5 சதவீதமாகும் (2019-20 நிதியாண்டிற்கான வரிக்குப் பிந்தைய லாபத்தில் 41 சதவீதம்). தீபம் வழிகாட்டுதல்களின் படி இந்த தொகை வழங்கப்பட்டது.

எஸ் பி எம் சி ஐ எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திருமதி திரிப்தி பி கோஷ், ஈவுத் தொகைக்கான காசோலையை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார்

------


(Release ID: 1688657) Visitor Counter : 185