எஃகுத்துறை அமைச்சகம்

‘கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு துறையில் எஃகு துறைக்கு புதிய வாய்ப்புகள்’ பற்றி இணைய கருத்தரங்கு

Posted On: 14 JAN 2021 2:39PM by PIB Chennai

எஃகு பற்றிய இரண்டாவது இணைய கருத்தரங்குத் தொடரை, ‘‘கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு துறையில்  எஃகு துறைக்கு புதிய வாய்ப்புகள்’  என்ற தலைப்பில் எஃகு அமைச்சகம், இந்திய எஃகு சங்கம் ஆகியவை இணைந்து நாளை நடத்துகின்றன. இதில் மத்திய எஃகு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், தலைமை விருந்தினராகவும், எஃகுத்துறை இணையமைச்சர் திரு பகன் சிங் குலாஸ்தே சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்கின்றனர்.

கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு துறையில் எஃகு-க்கு புதிய வாய்ப்புகள், எஃகு பயன்பாட்டில் புதிய முன்னோக்குகள் ஆகியவற்றில் இந்த இணையக் கருத்தரங்கு கவனம் செலுத்தும்எஃகு, கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு  தொழில் துறைகளைச் சார்ந்த  முக்கிய தலைவர்கள் இந்த இணையகருத்தரங்கில் பங்கேற்கின்றனர்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688512

------


(Release ID: 1688575) Visitor Counter : 186