பாதுகாப்பு அமைச்சகம்

கடலோரப் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட ‘கடல் கண்காணிப்பு பயிற்சி 21’ நிறைவு

प्रविष्टि तिथि: 14 JAN 2021 11:35AM by PIB Chennai

கடலோரப் பாதுகாப்புக்காக, கடல் கண்காணிப்புப் பயிற்சி 2021 ஜனவரி 12, 13 தேதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இந்த கடல் கண்காணிப்புப் பயிற்சியில், ஒட்டு மொத்த கடலோரப் பகுதி, பிரத்தியேக பொருளாதார மண்டலம், அமைதி காலம் முதல் போர் நேரங்களில்  மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வரை அனைத்துவிதமான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பயிற்சியில் இந்திய கடற்படை, கடலோரப் பாதுகாப்பு படை ஆகியவை இணைந்து ஈடுபட்டன. அத்துடன், கடலோர காவல் துறையினரும், சுங்கத்துறையினரும் இணைந்து இந்தப் பயிற்சியில் ஈடுபட்டனர். நாட்டின் கடலோரப் பகுதி முழுவதையும் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையின் விமானங்களும்,  ஹெலிகாப்டர்களும் கண்காணித்தன.

கடல் வர்த்தகத்தில் முக்கிய மையமாக துறைமுகங்கள் இருப்பதால், அவற்றின் பாதுகாப்பு குறித்த பயிற்சிகள், நெருக்கடி மேலாண்மை திட்டங்கள், துறைமுக பாதுகாப்பு நடவடிக்கைகள், அவசர நிலையை எதிர்கொள்வது போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடலோர தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் பயிற்சியில் மாநில போலீசார், இந்திய கடற்படை மற்றும் தேசிய பாதுகாப்பு படை  கமாண்டோக்கள் ஈடுபட்டனர்.

இந்தப் பயிற்சியில் திட்டமிடப்பட்ட அனைத்து நோக்கங்களும், அனைத்து தரப்பினரின் முழு மனதான பங்களிப்புடனும், ஒத்துழைப்புடனும் பூர்த்தி செய்யப்பட்டன

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688462

-----


(रिलीज़ आईडी: 1688548) आगंतुक पटल : 271
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Punjabi , Malayalam