சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உயர்தர சுகாதார சேவையை வழங்கும் பொது, தனியார் மருத்துவ மையங்களுக்கு காயகல்ப் விருதுகள் : டாக்டர் ஹர்ஷ் வர்தன் வழங்கினார்
Posted On:
12 JAN 2021 6:09PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபேவுடன் இணைந்து ஐந்தாவது தேசிய காயகல்ப் விருதுகளை காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
இந்தியாவின் பொது சுகாதார மையங்களில் சுகாதாரத்தையும் தூய்மையையும் உறுதி செய்வதற்காக கடந்த 2015 மே 15 ஆம் தேதி காயகல்ப் என்ற தேசிய முன்முயற்சியை இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. தூய்மை, சுகாதாரம் தொற்று கட்டுப்படுத்துதல் போன்ற பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் மாவட்ட மருத்துவமனைகள், துணை பிரதேச மருத்துவமனைகள், சமூக சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற பொது சுகாதார மையங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
காயகல்ப் திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், “பொதுசுகாதார மையங்களின் தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பெருவாரியான மக்களின் குணநலன்களை மேம்படுத்துவதிலும் காயகல்ப் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என்று கூறினார்.
“716 மாவட்ட மருத்துவமனைகளும், மத்திய அரசின் நிறுவனங்களும் இந்தத் திட்டத்தின் முதல் ஆண்டில் இணைந்திருந்தன. தற்போது 26,172 பொதுசுகாதார மையங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 2019-20-இல் காயகல்ப் மையங்கள் 7,615 ஆக உயர்ந்தன” என்று அவர் தெரிவித்தார்.
“காயகல்ப் முன்முயற்சி வெற்றி அடைந்ததால், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்துடன் இணைந்து எங்கும் சுத்தம் சுகாதாரம் (எஸ்எஸ்எஸ்) என்ற திட்டத்தைத் தொடங்கியது. இதன்படி திறந்தவெளி கழிப்பறை ஒழிக்கப்பட்ட பகுதியின் சமூக சுகாதார மையம், தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக ரூ. 10.00 இலட்சம் உதவியாகப் பெறும்”, என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688001
******************
(Release ID: 1688046)
Visitor Counter : 274