உள்துறை அமைச்சகம்
இந்திய-வங்கதேச காவல்துறைத் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை
Posted On:
12 JAN 2021 5:56PM by PIB Chennai
நேர்மறை எண்ணம் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சூழலில், இந்தியா மற்றும் வங்கதேசத்தின் காவல்துறை தலைவர்கள் இடையேயான முதல் காணொலி பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இரு தரப்பு கூட்டு, பரஸ்பரம் கவலை அளிக்கக் கூடிய விஷயங்கள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்த அதே சமயத்தில் இரு நாடுகளின் காவல்துறைகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
ஏற்கனவே இருக்கும் மற்றும் இனி வரக்கூடிய பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு சவால்களை திறம்படவும், சரியான நேரத்திலும் கையாளும் வகையில் குறிப்பிட்ட 'தொடர்பு புள்ளிகள்' உருவாக்கப்படும்.
சர்வதேச பயங்கரவாத குழுக்கள் மற்றும் தலைமறைவாக இருந்து செயல்படுபவர்கள் எங்கிருந்தாலும், அவர்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளை அதிகரிக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டன. இந்த பிராந்தியத்தில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையை பரஸ்பரம் பாராட்டிக் கொண்ட இரு நாடுகளும், தொடர்பு புள்ளிகள் மூலம் உளவுத் தகவல்களையும், பின்னூட்டங்களையும் பகிர்ந்து கொள்வதும், அவசியம் என்றும் வலியுறுத்தின.
போதை மருந்துகள், இந்திய கள்ள நோட்டுகள், ஆயுதங்கள் மற்றும் ஆட்களை கடத்துதல் உள்ளிட்ட எல்லை தாண்டிய குற்ற நடவடிக்கைகளை தடுக்க இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
******************
(Release ID: 1688016)
Visitor Counter : 128