நிதி அமைச்சகம்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சீர்திருத்தங்களை நிறைவு செய்தது மணிப்பூர் : ரூ.75 கோடி கூடுதல் கடனுக்கு அனுமதி

प्रविष्टि तिथि: 12 JAN 2021 12:25PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை கடந்த 2020 மே 17-ஆம் தேதி அறிவித்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சீர்திருத்தங்களை, மணிப்பூர் நான்காவது மாநிலமாக அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த மாநிலம் திறந்தவெளிச் சந்தைக் கடன் முறை மூலம் ரூ. 75 கோடி கடனைக் கூடுதலாகப் பெற தகுதி பெற்றுள்ளது. இதற்கான அனுமதியை ஜனவரி 11-ஆம் தேதி   செலவினத் துறை வழங்கியது.

ஏற்கனவே இந்தச் சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ள ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுடன் மணிப்பூர் தற்போது இணைந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சீர்திருத்தங்களை நிறைவேற்றியதை அடுத்து இந்த நான்கு மாநிலங்களும் ரூ. 7,481 கோடியைக் கூடுதல் கடனாகப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அமைப்பை வலுப்படுத்துவதையும், சிறப்பான பொது சுகாதாரம், தூய்மை சேவைகளை வழங்குவதற்கு அவற்றைத் தயார்படுத்துவதையும் இந்த சீர்திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. பொருளாதார ரீதியாக புத்தாக்கம் பெற்ற நகர்புற உள்ளாட்சி அமைப்புகளால் சிறந்த உள்ளூர் உள்கட்டமைப்பை உருவாக்க முடியும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687861

*******

(Release ID: 1687861)


(रिलीज़ आईडी: 1687964) आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Manipuri , Bengali