குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

இந்தியாவின் ஆற்றல் சக்தியை உலகளவில் மேம்படுத்த திறன்வாய்ந்த சுற்றுலா தலங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர்

Posted On: 12 JAN 2021 1:39PM by PIB Chennai

இந்தியாவின் ஆற்றல் சக்தியை உலகளவில் மேம்படுத்துவதற்காக திறன்வாய்ந்த சுற்றுலா தலங்களை, விருந்தோம்பல் துறை முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு‌‌ எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தியுள்ளார். ‘அதிதி தேவோ பவ' என்னும் இந்திய கருத்துரு குறித்து பேசிய அவர், நமது கலாச்சாரம், உணவு முறை, வெளிநாட்டவரை வரவேற்கும் விதங்கள் ஆகியவை நம் நாட்டிற்கு கூடுதல் விருந்தினர்களை ஈர்க்க உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

தேசிய இளைஞர் தினமான இன்று சுவாமி விவேகானந்தருக்கு மரியாதை செலுத்தி அவரைப் பற்றி பேசிய குடியரசுத் துணைத் தலைவர், அவரது குணநலன்களைப் பின்பற்றி அவர் வகுத்துத் தந்த பாதையில் இளைஞர்கள் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கோவாவின் உணவு மேலாண்மைக் கழகத்தில் பேசிய திரு நாயுடு, 2018-19 ஆண்டில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பில் 12.75 சதவீதம் அளவிற்கு 87.5 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து, நாட்டில் மிகப் பெரும் அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரத்திற்கு சுற்றுலாத்துறை மிக முக்கிய பங்காற்றி வருவதாக அடிக்கோடிட்டுக் கூறினார்.

பெருந்தொற்றின் காரணமாக வெளிநாட்டுப் பயணிகளின் வருகை குறைந்து, அதன் காரணமாக வேலை வாய்ப்பை இழந்து இந்தத் துறை பெருமளவு பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், இந்தத் தாக்கம் தற்காலிகமானதே என்றும், விருந்தோம்பல் துறை மீண்டும் எழுச்சி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இயல்பான சூழ்நிலை திரும்பிய பிறகு மக்கள் பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டுவார்கள்  அவர் குறிப்பிட்டார்.

கொவிட்- 19-க்குப் பிந்தைய காலகட்டத்தில் உள்நாட்டில் பயணம் மேற்கொள்ள மக்கள் ஆர்வம் தெரிவித்து வருவதை மிகப்பெரும் வாய்ப்பாகப் பயன்படுத்தி ஸ்வதேஷ் தர்ஷன், பிரசாத் போன்ற திட்டங்களின் உதவியுடன் இந்தத் துறை வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டும் என்று திரு நாயுடு கூறினார்.

கன்னியாகுமரியில் பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், அந்தமானின் சிற்றறைச் சிறை, குஜராத்தின் ஒற்றுமை சிலை ஆகியவற்றை இளைஞர்கள் பார்வையிட வேண்டும் என்று திரு நாயுடு வலியுறுத்தினார். மத்திய அரசின் உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டம் குறித்து பேசிய அவர், “வெளிநாடுகளுக்கு செல்லும் முன்னர் நமது தேசத்தைப் பாருங்கள்என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687884

******

(Release ID: 1687884)


(Release ID: 1687912) Visitor Counter : 213