சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
எய்ம்ஸின் வளமான பாரம்பரியத்தில், அடுத்த அத்தியாயத்தை சேர்ப்போம் - டாக்டர் ஹர்ஷ் வர்தன்
Posted On:
11 JAN 2021 5:43PM by PIB Chennai
எய்ம்ஸின் வளமான பாரம்பரியத்தில், அடுத்த அத்தியாயத்தை நாம் ஒன்றிணைந்து சேர்ப்போம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.
தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) 47வது பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்கினார். இதில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வின் குமார் சவுபே கலந்து கொண்டார். இதில் தலைமை விருந்தினராக உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய மண்டல இயக்குனர் திருமிகு பூனம் கேத்ரபால் சிங் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது:
இந்தியர்களுக்கு உலகத்தரமான மருத்துவக் கல்வி கிடைப்பதற்காக, எய்ம்ஸ் நிறுவனர் ராஜ்குமாரி அம்ரித் கவுர், வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடம் இருந்து நிதி திரட்டினார்.
இன்று மருத்துவ கல்வி நிறுவனங்களின் தரப்பட்டியலில் கடந்த 3 ஆண்டுகளாக முதல் இடத்தில் எய்ம்ஸ் உள்ளது. இந்நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு, நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும். எய்ம்ஸ் பாரம்பரியத்தை நாம் பாதுகாத்து, சிறப்பான எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும். நாம் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருக்க கூடாது. எய்ம்ஸ் பாரம்பரியத்தின் அடுத்த அத்தியாயத்தை நாம் ஒன்றிணைந்து சேர்க்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசினார்.
எய்ம்ஸ் மையத்தின் 6 மூத்த பேராசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த பட்டமளிப்பு விழாவில் 1,100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றனர். அவர்களில் 90 பேர் பதக்கங்கள் பெற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687663
----
(Release ID: 1687722)